Friday, 10 February 2012

கடந்த 20 வருடங்களில்

கடந்த 20 வருடங்களில் அரசுக்கு சொந்தமாக புதிய மின் நிலையங்களை உருவாக்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு உற்பத்தி சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டது. மின்சார உற்பத்தி தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. தனியார் மின் நிலையங்களில் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப் பட்டது. நம் மின்சாரத்துறை கடுமையான நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

விரிவாகச் சொல்வதானால் 1994-95 இல் தமிழக அரசின் உற்பத்தி, மொத்த தமிழகத் தேவையில் 65%ஆக இருந்தது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து மீதமுள்ள 34.5% பெறப்பட்டது. தனியாரிடம் இருந்து வெறும் 0.5% மின்சாரம் வாங்கப்பட்டது. இந்த காலங்களில் வருவாய் மின்சார வாரியத்திற்கு அதிகமாகவும், உபரியாகவும் இருந்த்து. இதைக் கொண்டு புதிய மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு வர இயன்றது. மேலும் விவசாயம், குடிசைகள், நலிவடைந்த தொழில்களுக்கு சலுகையாக அளிக்கவும் முடிந்தது. 1994ஆம் ஆண்டுக்கு பின்னர், அந்த சமயத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸின் மன்மோகன்சிங், மாண்டெக் சிங்கின் புதிய பொருளாதாரக் கொள்கையால் தமிழ்நாடு மின்சார வாரியம்( அனைத்து மாநிலங்களுக்கும் இதே கதிதான்) சுயமாக மின் உற்பத்திச் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக தனியாரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் 1994இல் 3858 கோடி ரூபாய் இலாபம் ஈட்டிய மின்சாரவாரியம் 2001இல் ரூ4851 கோடி நட்டத்தை சந்தித்தது. மேலும் மின்சாரத்தேவை 1994 இல்(29075 மில்லியன் யூனிட்) இருந்ததைப் விட 2007இல் தேவை 100% (66,815 மில்லியன் யூனிட்) உயர்ந்தது (இருமடங்காகியது). மாநில அரசு சுயமாக மின் உற்பத்திச் செய்யப்படுவதை தடுத்த மத்திய அரசு, தான் பங்களிக்கும் மின்சாரத்தை வெறும் 50% மட்டுமே உயர்த்தியது. 1994இல் வெறும் 0.5% மின்சாரம்(122 மில்லியன் யூனிட்) உற்பத்திச் செய்த தனியார் நிறுவனங்கள், 2007இல் 50%ஆக ( 23,924 மில்லியன் யூனிட்) மின் உற்பத்தியை செய்ய ஆரம்பித்தது.

இதன் மூலம் மாநில மின்சார வாரியம் தனியார் உற்பத்தியை சார்ந்து நிற்க மறைமுகமாக கட்டாயப்படுத்தியது. மேலும் மத்திய அரசு தனது கடமையை கைகழுவி, மின்பகிர்மானம்-உற்பத்திக் கட்டுப்பாட்டை தன் கையில் கொண்டு வந்தது.அதாவது மாநில அரசு தனது இறையாண்மையை இழந்தது. இதனடிப்படையிலேயே நாம் கூடன்குளம்-கல்பாக்கம் அணு மின் உற்பத்தியையும் பார்க்க முடியும். இது மத்திய அரசின் உற்பத்தி திட்டம். இதன் மூலம் மத்திய அரசு மேற்குலக நாடுகளுக்கு ஒப்பந்தமிட்டு தனியாரை ஊக்குவிக்கிறது. மேலும் அணு ஒப்பந்ததில் பெரும் பணத்தை இலஞ்சமாக பெறவும் வழிவகை செய்கிறது. ஆனால் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்கோ, அதன் மக்களுக்கோ அளிக்கப்பட போவதில்லை. இது தனியார் நிறுவன்ங்களுக்கும், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படப்போகிறது.

இந்த மக்கள் விரோத தனியார்-மின்வாரிய ஒப்பந்தங்களை நடைமுறைபடுத்த உயர் நீதிமன்றத்தின் வழியாக மக்களோ, ஆர்வலர்களோ, இயக்கங்களோ தலையிடாமல் இருக்க மின்சாரத்திற்கென ஒரு நீதிமன்றம் பாணியிலான (பஞ்சாயத்து) ஒரு மன்றம் "ஒழுங்குமுறை ஆணையம்" என்கிற பெயரில், புதிதாக இயற்றப்பட்ட "மின்சார ஒழுங்கு சட்டம் " இயற்றப்பட்ட்து. இவை அனைத்தும் தனியாரிடம் உற்பத்தியை அளிப்பதும், மாநில அரசுகள் மின் உற்பத்தியை செய்வதை தடுத்து மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை தனியாரின் நலனுக்க்கு ஏற்ப அளிக்கச் செய்வதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. உலகமயமாக்கலை இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டு வந்த காங்கிரஸ்-மன்மோகன் மேற்குலக அரசின் திட்டத்தின் படி இதை செய்தார்கள். இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் மின் உற்பத்தியும், மின்சார கொள்முதல் விலை நிர்ணயமும் இருக்காமல் வழிவகை செய்தது மத்திய அரசு. இதனால் மா நில அரசுகள் சலுகை விலையில் மின்சாரம் விவசாயம்-குடிசை போன்றவர்களுக்கு அளிப்பதை தடுக்க இயலும்.

மேல்சொன்ன அனைத்து நட்டத்தையும் சாத்தியப்படுத்துவதற்காக வேலை செய்ய வழி வகுத்தது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். இந்த ஆணையம் தனியாருக்கும்-மின்சார வாரியத்திற்கும் உண்டான வழக்குகளில் தனியார் நிறுவன்ங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பெரும் தொகையை பெறுவதற்கு ஏதுவாக தீர்ப்பளித்தது. இதன் மூலம் வருட்த்தில் 330 நாட்களும் இயங்காமல் செயல்பட்ட தனியார் நிறுவன்ங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் பணத்தை மின்சார வாரியத்திடமிருந்து பெற முடிந்தது. தனியார் காற்றாலைகளுக்கு ஏதுவாக வருடந்தோரும் 600 கோடி ரூபாய் நட்ட்த்தை மின்சார வாரியத்திற்கு உருவாக்கியது இந்த ஒழுங்குமுறை வாரியம். சாஃப்டுவேர் நிறுவனங்கள் கேட்காத போதும் கூட, இந்த நிறுவனங்களுக்கு கட்டணச் சலுகையும் அறிவித்தது. இதை விட உச்சகட்டமாக 189 கோடி ரூபாய் கேட்டு மின்சார வாரியத்தின் மீது வழக்கு தொடர்ந்த பி.பி.என் என்கிற நிற்வனத்திற்கு கிட்ட்தட்ட 1050கோடி ரூபாய் நட்ட ஈட்டை வழங்கச் சொல்லி உத்திரவிட்ட்து இந்த ஆணையம். இவ்வாறு இதுவரை கிட்ட்தட்ட 53,298 கோடி ரூபாய் நட்டத்தை உருவாக்கி இருக்கிறது. .

முன்னர் இதே போல தனியார் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும், சாஃப்டுவேர் நிறுவனங்களுக்கும் சலுகை விலையில் மற்றும் முன்பிருந்த விலையிலிருந்து குறைத்து மின்சாரத்தைக் கொடுத்த காரணத்தால் நம் மின்சாரத்துறைக்குக் கடுமையான கடன்சுமை ஏற்படுத்தப் பட்டது.
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மின்சார விலையில் அளித்த சலுகையின் காரணமாகக் கிட்டதட்ட ரூ.50 ஆயிரத்து 512 கோடியை நம் மின்சார வாரியம் இழந்துள்ளது. அந்த இழப்பினைப் பொதுமக்களான நம்மிடம் இருந்து வசூலிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.9741 கோடி ரூபாயை வசூலிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதன் படி நமது மின்சார கட்டணம் இரண்டு மடங்காக உயரப்போகிறது.
மின்வாரியத்தின் மொத்த இழப்பீட்டில் வெறும் ரூ.9741 கோடி ரூபாயை வசூலிக்கவே நம் மின் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தப் போகிறார்கள். மீதமுள்ள ரூ.40771ஆயிரம் கோடியை வரும் ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். அப்போது, அடுத்து வரும் ஆண்டுகளில் நம் மின் கட்டணம் எத்தனை மடங்கு அதிகரிக்கப் போகிறது என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இவ்வளவுக்கும் காரணம் யார்?
மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையை 1990ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த காங்கிரஸ்- மன்மோகன் கூட்டனியும், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை வாரியத்தின் (மின்சார வாரியத்திற்கான நீதிமன்றம்) நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு மின் உற்பத்தியில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கேட்கும் போதெல்லாம் அந்தத் தொகையையும், சில சமயங்களில் அதற்குக் கூடுதலான தொகையையும் மின்சார ஒழுங்குமுறை வாரியம் நம் மின்சாரத் துறையிடமிருந்து வாங்கிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை பெரும்பாலான நமது நலனுக்குப் புறம்பாகவே அமைந்துள்ளது. நம்மைக் கடன் சுமையில் ஆழ்த்தும் செயலையே அது செய்திருக்கிறது. அதோடு நிற்காமல், பன்னாட்டு நிறுவங்களுக்குப் போதுமான மின்சாரம் அளிப்பதாலும், மிகச்சலுகை விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதாலும் ஏற்படும் நட்டம் அனைத்தையும் நம்மிடமிருந்து வசூலிக்கும் செயலிலும் அது ஈடுபட்டு வருகிறது. வேறு எவருக்காகவோ சலுகை அளிக்க வேண்டி நம்மிடம் பணம் வசூலித்தது போதாதென்று, அவர்களுக்காகத் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக நம் உடைமையையும், உயிரையும், நிலத்தையும், சந்ததிகளையும் அழிக்க வல்ல கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணு மின் நிலையங்கள் போன்ற மின் நிலையங்களை அமைப்பதற்கும் இந்த வாரியமும், அதனை அமைத்த மத்திய அரசும் முழு முயற்சி செய்து வருகின்றன.
2010 ஆண்டில் மென்பொருள் நிறுவனங்களுக்கு (சாஃப்டுவேர் நிறுவனங்கள்) யூனிட் ஒன்றுக்கு 2.50 ரூபாய் சலுகையை இந்த வாரியம் அளித்தது. இவ்வாறு குறிப்பிட்ட சில துறைகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகைகள வாரி வழங்கி வழங்கியே நம் மாநிலத்தின் மின்சாரத்துறையை அது மீழாக் கடனில் தள்ளியுள்ளது. உலகமயமாக்கல், தனியார்மயம், தொழில் துறையில் 10% வளர்ச்சி என்று பேசி பேசியே இன்று பிறரின் சுமையை இந்த வாரியம் நம் தலையில் ஏற்றி வைத்துள்ளது.
இந்த வாரியத்தை அமைத்த மத்திய அரசோ, கூடங்குளம்,கல்பாக்கம் அணு மின் நிலையங்களை நம் தலைமுறையை அவை அழிக்கும் என்று தெரிந்தே தனியாருக்கு மின்சாரம் வழங்க வேண்டுமென்பதற்காக நம் மீது திணிக்கின்றது.

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான்.


தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய "முதற்தாய் மொழி" வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன

ஆஸ்த்திரேலியாவை சார்ந்த பழங்குடிகள்

தூய தமிழ்ச்சொற்கள்

ஆஸ்த்திரேலியாவை சார்ந்த பழங்குடிகள் இவர்கள். இவர்கள் பேசும் மொழி தமிழை ஒத்து உள்ளது. இவர்களுக்கும் நமக்கும் திராவிட பந்தம் உள்ளது. குமரிகண்டத்தில் ஒன்றாக இருந்து பிரிந்திருக்கலாம்.
இவர்களை பார்க்கும்போது நம் முப்பாட்டன் போல் இருக்கிறார்கள் அல்லவா.

லெமூரியா கண்டம்

இது நம் தமிழ் இனம் தோன்றிய லெமூரியா கண்டம் ..அரிதானே புகை படம் அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...
நீங்கள் விரும்பினால் என் facebook page பக்கத்தில் இணைந்து கொள்ளலாம் ... Click this URL - www.facebook.com/SenthamizhDhasan

20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு

தூய தமிழ்ச்சொற்கள்

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.....

வர்மம் "

வர்மம் "

ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது..அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான " அகத்தியர் " . இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்கு சாட்சி !." அகத்தியர் " கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்","அகஸ்தியர் வர்ம கண்டி ", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம் ","அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு ","அகஸ்தியர் வர்ம கண்ணாடி ","வர்ம வரிசை","அகஸ்தியர் மெய் தீண்டாகலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன் " என்ற மன்னன் தான் இதில் வல்லவனாக திகழ்ந்தான்.பின்னர் பாண்டிய இனம் அழியத்தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்கு பின்னர் வந்த " சோழர்கள் " இதனை கற்றனர். பின்னர் இந்த கலை "இலங்கை", "சீனா" போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது.காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி " புத்த" மதத்தை பரப்ப " சீனா " செல்லும் போது இந்த கலையும் அங்கு பரவியது."Tenjiku Naranokaku" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது."ஹு ஷிஹ் " என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது " இந்திய ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். "1793 " ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது.தாங்கள் இத கலை மூலமாக பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தமிழக இளைஞ்சர்கள் இந்த கலை பயில்வதை தடை செய்தனர்.அன்று ஆரம்பமான அழிவு , இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது !.இந்த கலையானது அனைவருக்கும் கற்று தர மாட்டாது. இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்!!.இந்த கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறை கையாள வேண்டும் என " "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே " என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.இதை எந்த வயதினரும் கற்கலாம்! ஆனால் யார் மட்டுமே கற்க முடியும் ? " "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே "என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது .வர்மக் கலைகளின் வகைகள் " "தொடு வர்மம்", " படு வர்மம்","தட்டு வர்மம் ","நோக்கு வர்மம் " என வகை படுத்தப்பட்டுள்ளது
தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார் .இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும்.இந்த பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ,ஒரு நாளிலோ, ஒரு மாததிலோ,அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும் !. படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும் !.தட்டு வர்மம் யாருக்கும் கற்று தரப்படமாட்டாது.இது மிகவும் மோசமான பிரிவு .ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும் .நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும் ! உதாரனத்திற்க்கு சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம் ! அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம் !!!.ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரை தாக்கும் வல்லமை கொண்டது இந்த கலை, ஆனால் இது யாருக்கும் கற்று தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் இதை கற்கலாம் " தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் " என்று தான் எனக்கு தோன்றுகிறது. " இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை. இனியாவது விழித்துக்கொள்வோம் !!!.