நீங்கள் யாரை மதிக்கிறீர்கள்......
நாம் பொதுவாக யாரை மதிக்கிறோம் என்று பார்த்தால் ஒன்று பணம் படைத்தவராக இருப்பவா்கள் அல்லது
அதிகாரம் படைத்தவா்கள். நவீன உடை அணிந்து ஆடம்பரமாக காரில் வந்தால் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி. அதேசமயம் ஒருவர் மிக சாதாரண உடையில் தாடியுடன் வந்தால் அவரை ஏரெடுத்து பார்க்க மாட்டோம். அதுவும் சாதுக்கள் சன்யாசிகள் என்றால் மிக கேவலமாக பார்க்கிறோம்.
கழக ஆட்சிகளின் கைங்கரியத்தால் சாமியார்களிடம் மரியாதை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மறைந்து விட்டது. நம் குழந்தைகளுக்கு புச்சாண்டி என்று சாமியார்களைக் காட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வட மாநிலங்களில் இந்த அளவு தாழ்ந்து போகாமல் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சாது சன்யாசியைக் கண்டால் வீட்டிற்கு அழைத்து உணவு கொடுத்து செலவுக்கும் பணம் கொடுக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை பாபாஜியை வணங்கு. என்று ஆசி பெற கற்றுக்கொடுக்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். ஒரு அழகான பெண்மணி மிக ஆடம்பரமான காரில் ஒரு நகைக் கடையின் முன் வந்திறங்கினார். அவருக்குத்தான் மிக அருமையான வரவேற்பு கிடைக்குமே. கிடைத்தது. நகைகள் வாங்கினார். அப்போதே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்பு வந்தது. வாங்கி முடித்ததும் பணப்பையை காரில் வைத்து விட்டு வந்துவிட்டேன் எடு்த்து வருகிறேன் என்று வாங்கிய நகைகளுடன் காருக்குச் சென்றார். அப்படியே காருடன் பறந்து விட்டார். இது போல் இன்டர்நெட் பிராடுகளும் இன்டர்நேஷனல் பிராடுகளும் ஆடம்பரமாகத்தான் வந்து ஏமாற்றுகிறார்கள். அவர்களிடம்தான் நம் மக்களும் ஏமாறுகிறார்கள்.
ஒரு ஆட்டோ டிரைவா் தன் ஆட்டோவில் பயணி விட்டுச்சென்ற பல லட்ச ரூபாய் பணத்தை திரும்ப ஒப்படைக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மாத இதழில் படித்த உண்மை சம்பவம். ஒரு பணக்கார பெண்மணி லேடிஸ் கிளப்பில் தலைவி. அவரிடம் ஒரு பழக்கம். அதாவது யாராவது பிச்சை கேட்டால் பணம் போடமாட்டார். பிஸ்கட் பாக்கெட் கொடுப்பார். இவர் தன் சக கிளப் உறுப்பினர்களிடம் சந்தா தொகை ரூ.ஐந்தாயிரத்தை ஒரு கேரி பேக்கில் போட்டுக்கொண்டு காரில் வந்துள்ளார். சிக்னலில் காரை நிறுத்தினார். ஒரு சிறுவன் பிச்சை கேட்டு கையை நீட்டினான். இவர் பிஸ்கட்பாக்கெட் உள்ள கேரிபேக் என்று நினைத்து சந்தா தொகை கவரைக் கொடுத்து விட்டார். வீட்டிற்கு சென்று பார்த்தால் பணத்தை பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டது தெரிகிறது. இவருடைய வசதிக்கு அது ஒரு அற்ப காசு. ஆனாலும் மனம் கேட்கவில்லை. ஒருவாரம் ஆனது. அதே சிறுவனை அதே சிக்னல் அருகில் பார்த்தார். அவன் அவரிடம் ஓடி வந்து அவா் கொடுத்த கவரை அப்படியே திருப்பிக் கொடுத்தான். அம்மா நான் இதை உங்களிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று தினம் வந்து கொண்டிருக்கிறேன். இன்றுதான் பார்க்க முடிந்தது என்று ஒப்படைத்திருக்கிறான். இவருக்கு ஆச்சரியமும் சந்தோஷமும். அவனிடம் நூறு ரூபாய் கொடுத்திருக்கிறார். அவன் மறுத்து எனக்கு பிஸகட் பாக்கெட் போதும் அம்மா என்று கூறியிருக்கிறான்.
இது போல் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் நாம் நேர்மையான ஒரு ஏழையை நம்புவதில்லை. மதிப்பதில்லை. வேடம்போடும் ஆசாமிகளுக்கு மரியாதை செய்துகொண்டு இருக்கிறோம். சாதுக்கள் சன்யாசிகளை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமதித்து விடக்கூடாது. அவமதித்தால் நமக்கு கெட்ட காலம் ஆரம்பமாகிவிட்டது என்று பொருள்.

Thanks & Regards,
Yahoo . Groups